'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ?
31 தை 2025 வெள்ளி 10:20 | பார்வைகள் : 8403
சிவகார்த்திகேயன் நடித்த ’பராசக்தி’ என்ற படத்தின் டைட்டிலுக்கு சில எதிர்ப்புகள் வந்த நிலையில், அந்த எதிர்ப்புகளை சரி செய்து விட்டதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இன்னொரு எதிர்ப்பு கிளம்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ’பராசக்தி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டது. ஆனால், இந்த டைட்டில் அறிவிப்புக்கு சில மணி நேரத்திற்கு முன்பு, விஜய் ஆண்டனி தனது படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ’பராசக்தி’ என்ற பெயரை வைத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, இரு தரப்பும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விஜய் ஆண்டனி தனது தெலுங்கு படத்திற்கு வேறு டைட்டில் வைத்துக் கொள்வதாக ஒப்புக்கொண்டார்.
அதுமட்டுமின்றி, ’பராசக்தி’ என்ற டைட்டிலை பயன்படுத்தக்கூடாது என்று சிவாஜி ரசிகர் மன்றத்தினர் அறிக்கை வெளியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிவாஜி கணேசன் நடிப்பில், கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான ’பராசக்தி’ படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏ.வி.எம். நிறுவனம், அந்த டைட்டிலை வழங்க முன்வந்து அதிகாரபூர்வமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.
ஆனால் அதே நேரத்தில், ’பராசக்தி’ திரைப்படத்தை தயாரித்த இன்னொரு நிறுவனம் நேஷனல் பிக்சர்ஸ், ’பராசக்தி’ திரைப்படத்தின் டைட்டிலை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளது. "பராசக்தி" திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் பயன்படுத்தி வெளியிட நாங்கள் திட்டமிட்டு உள்ளோம், எனவே அந்த டைட்டில் எங்களுக்கு முழு உரிமை உள்ளது. அதனால், யாரும் அந்த டைட்டிலை பயன்படுத்தக்கூடாது" என்றும் அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan