சுவீடனில் குரானை எரித்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நபர் சுட்டுக்கொலை

30 தை 2025 வியாழன் 15:45 | பார்வைகள் : 9802
சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
2023ம் ஆண்டு சுவீடனில் குரானை எரித்ததன் மூலம் வன்முறை ஆர்ப்பாட்டங்களிற்கு வித்திட்ட சல்வான் மொமிகா என்ற 38 வயது நபர் ஸ்டொக்ஹோமில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவீடனில் வசித்த ஈராக்கியரான மொமிகாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகயிருந்த நிலையிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மொமிகா இஸ்லாமிய மதத்தி;ற்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தில் மொமிகா இரண்டு தடவைகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்,
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் அவரின் நடவடிக்கைகளிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1