உக்ரைன் ரஷ்ய போர்முனை - வடகொரிய படையினர் தற்கொலை
29 தை 2025 புதன் 16:15 | பார்வைகள் : 6826
ரஷ்ய உக்ரைன் போர்முனையில் ரஸ்யாவின் சார்பில் போரிடும் வடகொரிய படைவீரர்கள் உயிருடன் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக கைக்குண்டுகளை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொள்கின்றனர் என உக்ரைனிய படையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஸ்கைநியுஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது
வடகொரிய படையினர் பெரும் உயிரிழப்புகளை சந்தித்த பின்னர் ரஸ்ய உக்ரைன் முன்னரங்கிலிருந்து தற்காலிகமாக பின்வாங்கியுள்ளனர் என போல தோன்றுவதாக உக்ரைனின் விசேட படைப்பிரிவின் தளபதியொருவர் தெரிவித்தார்.
பல்ஸ் என்ற சங்கேத பெயரை கொண்டுள்ள அந்த தளபதி வடகொரிய போர்வீரர்கள் உக்ரைனிய படையினருடான இரத்தக்களறி மிகுந்த முதல்கட்ட மோதல்களின் போது இழைத்த தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்கின்றனர் அல்லது மேலதிக படையினரின் வருகைக்காக காத்திருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் மீண்டும் விரைவில் போர்முனைக்கு திரும்புவார்கள் என இரகசியதளமொன்றிலிருந்து உக்ரைன் தளபதி தெரிவித்துள்ளார்.
கடந்தமாதம் கேர்ஸ்க் போர்முனைக்கு வந்துரஷ்ய படையினருடன் இணைந்து கொண்டது முதல் வடகொரிய படையினர் எவ்வாறு போரிடுகின்றனர் என்ற தகவல்களை உக்ரைனிய படையினர் வெளியிட்டுள்ளனர்.
உக்ரைன் படையினர் தெரிவித்துள்ளதாவது.
ஆளில்லா விமானங்கள் ஆட்டிலறிகளின் ஆபத்தை அறியாத வடகொரிய படையினர் இரண்டாம் உலக யுத்தம் போல சிறியசிறிய குழுக்களாக போரிட்டனர் இதனால் அவர்களை இலகுவாக இலக்குவைக்க முடிந்தது.
மூளைச்சலவைக்கு உட்படுத்தப்பட்டதால் அவர்கள் உக்ரைன் படையினரின் கடும் தாக்குதலின் மத்தியிலும் முன்னோக்கி நகர முயன்று பெருமளவில் உயிரிழந்தனர்.காயமடைந்தனர்.
ரஷ்ய உக்ரைன் போர்முனையில் தாங்கள் போரிடுவதற்கான ஆதாரங்களை அகற்றுவதற்காக வெள்ளை தலைக்கவசம் அணிந்த வடகொரிய போர்வீரர்கள் கொல்லப்பட்ட காயமடைந்த தங்களின் சகாக்களை போர்முனையிலிருந்துஅகற்ற முயன்றனர்.
உயிருடன் பிடிபட விரும்பாத வடகொரியா இராணுவத்தினர் காயமடைந்தால் கைக்குண்டுகளை வெடிக்கவைத்து உயிரிழக்கின்றனர் , கைக்குண்டுகளை வெடிக்க வைப்பதற்கு முன்னர் வடகொரிய ஜனாதிபதியின் பெயரை அவர்கள் உச்சரிப்பதை கேட்க முடிகின்றது .
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan