◉ அவதானம் : Coca-Cola பருகவேண்டாம்... (மீளப்பெறப்படுகிறது)

27 தை 2025 திங்கள் 17:11 | பார்வைகள் : 16187
Coca-Cola மென்பானத்தினை பருகவேண்டாம் எனவும், போத்தல்களை மீள கையளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல் பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, பிரித்தானியா, ஜேர்மனி, லக்ஸம்பேர் ஆகிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கடந்த நவம்பர் மாதத்தின் பின்னர் விற்பனைக்கு அனுப்பப்பட்ட Coca-Cola மென்பானங்கள் இருந்தால் அவற்றை பருக வேண்டாம் எனவும், அதனை மீள கையளித்து அவற்றுக்குரிய பணத்தினை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Coca-Cola நிறுவனத்தின் ஏனைய தயாரிப்புகளான Sprite, Fanta, Fuze Tea, Minute Maid, Nalu, Royal Bliss மற்றும் Tropico ஆகிய மென்பானங்களும் மீளப்பெறப்படுகின்றன.
(328 GE தொடக்கம் 338 GE வரையான தொகுதி இலக்கங்கள்)
மேற்படி மென்பானங்களில் க்ளோரைட் அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்படு மீளப்பெறப்படுவதாகவும், இதனால் சிறுவர்களுக்கு சிறு உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை ஐரோப்பாவுக்கான உணவுகள் பாதுகாப்பு ஆணையம் ( l'Autorité européenne de sécurité des aliments) அறிவித்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1