Paristamil Navigation Paristamil advert login

சூர்யகுமார் யாதவுடன் செல்ஃபி எடுத்த பாகிஸ்தான் ரசிகை

சூர்யகுமார் யாதவுடன் செல்ஃபி எடுத்த பாகிஸ்தான் ரசிகை

25 மாசி 2025 செவ்வாய் 09:02 | பார்வைகள் : 2629


இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், சூர்யகுமார் யாதவுடன் பாகிஸ்தானிய ரசிகை ஒருவர் செல்ஃபி எடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.

துபாயில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் தொடரை விட்டு வெளியேறியது.

இந்திய அணியில் இடம்பெறாத சூர்யகுமார் யாதவ், ரசிகர்களுடன் ரசிகராக அமைந்து போட்டியை கண்டுகளித்தார்.

அப்போது அவருக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாகிஸ்தான் ரசிகை ஒருவர், சூர்யகுமாரைப் பார்த்ததும் பரவசமடைந்து அவருடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  

மேலும் அவர் அருகில் இருந்த முதியவரை சூர்யகுமாருடன் சேர்த்து தனியாக ஒரு புகைப்படமும் எடுத்தார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் 'இந்தியா, பாகிஸ்தான் ஒற்றுமை' என குறிப்பிடப்பட்டு வைரலாகி வருகிறது.   

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்