Paristamil Navigation Paristamil advert login

டொலர், பவுண்ட், யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

டொலர், பவுண்ட், யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

24 மாசி 2025 திங்கள் 06:31 | பார்வைகள் : 6429


கடந்த வெள்ளிக்கிழமையுன் ஒப்பிடுகையில், ​​இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 51 சதம், விற்பனைப் பெறுமதி 300 ரூபாய் 8 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 368 ரூபாய் 17 சதம், விற்பனைப் பெறுமதி 382 ரூபா 9 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304 ரூபாய் 86 சதம், விற்பனைப் பெறுமதி 317 ரூபாய் 35 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 50 சதம், விற்பனைப் பெறுமதி 337 ரூபாய் 70 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204 ரூபா 5 சதம், விற்பனைப் பெறுமதி 212 ரூபாய் 77 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184 ரூபாய் 23 சதம், விற்பனைப் பெறுமதி 193 ரூபாய் 63 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 98 சதம், விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 88 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 94 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 1 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.