Champions Trophy 2025 - முதல் சதம் விளாசி வரலாறு படைத்த இளம்வீரர்
22 மாசி 2025 சனி 09:32 | பார்வைகள் : 2995
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் முதல் ஒருநாள் சதம் விளாசினார்.
சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் இன்றையப் போட்டியில், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 315 ஓட்டங்கள் குவித்துள்ளது. ரியான் ரிக்கெல்டன் 103 ஓட்டங்களும், டெம்பா பவுமா 58 ஓட்டங்களும் விளாசினர்.
ரஸ்ஸி வான் டெர் டுசென் 52 ஓட்டங்களும், எய்டன் மார்க்ரம் 52 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதில் ரியான் ரிக்கெல்டன் விளாசியது முதல் ஒருநாள் போட்டி சதம் ஆகும். அவர் 106 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம், தனது சாம்பியன்ஸ் டிராஃபி அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த மற்றும் உலகப்போட்டியில் முதல் சதம் அடித்த தென் ஆப்பிரிக்க வீரர் எனும் வரலாறு படைத்தார்.
28 வயதாகும் ரிக்கெல்டன் 7வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்துள்ளார். மேலும் 6 அரைசதங்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan