e-விசா சேவையை மீண்டும் தொடங்கியது உக்ரைன்
21 மாசி 2025 வெள்ளி 13:41 | பார்வைகள் : 9692
வெளிநாட்டவர்களுக்கு e-விசா சேவையை உக்ரைன் மீண்டும் தொடங்கியுள்ளது.
உக்ரைன் வெளியுறவுத்துறை, இந்தியா, பூட்டான், மாலத்தீவு, நேபாளம் உள்ளிட்ட 45 நாடுகளின் குடியுரிமையாளர்களுக்கு E-Visa சேவையை மீண்டும் தொடங்கி வைத்துள்ளது.
இச்சேவை பெப்ரவரி 19, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.
கல்வி, சுற்றுலா, வணிகம், கலாச்சாரம், அறிவியல், பத்திரிகை, விளையாட்டு, மருத்துவம் போன்ற பல்வேறு தேவைகளுக்காக பயணிக்க விரும்புவோர் இதன் மூலம் பயனடையலாம்.
ஒற்றை நுழைவு விசாவை 20 டொலருக்கும், இரட்டை நுழைவு விசாவை டொலருக்கும் பெறலாம்.
அவசர விசா விண்ணப்பத்துக்கு இரட்டை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், மேலும் வழக்கமான விண்ணப்பங்கள் மூன்று நாட்களில் மற்றும் அவசர விசாக்கள் ஒரே நாளில் வழங்கப்படும்.
இந்த தீர்மானம், இந்தியா-உக்ரைன் இடையேயான வர்த்தகம், கல்வி, மருந்துகள், பாதுகாப்பு மற்றும் கலாச்சார தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாகக் காணப்படுகிறது.
குறிப்பாக உக்ரைன் மருத்துவக் கல்விக்காக இந்திய மாணவர்கள் அதிகம் பயணிக்கும் நாடாக இருப்பதால், இ-விசா வசதி அவர்களுக்கு பயனளிக்கும்.
இந்தியா-உக்ரைன் உறவு 1991-ல் இந்தியா உக்ரைனின் சுதந்திரத்தை அங்கீகரித்த நாளிலிருந்து தொடர்கிறது. மேலும், கீவ் பல்கலைக்கழகங்கள் இந்தி பாடங்கள் வழங்கி வருகின்றன.
2020ல் மகாத்மா காந்தியின் சிலை திறந்து வைக்கப்பட்டதும் இரு நாடுகளின் கலாச்சார உறவை மேலும் வலுப்படுத்துகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan