Amélie இன் Caféக்கு சென்றிருக்கிறீர்களா!!?
3 கார்த்திகை 2017 வெள்ளி 13:30 | பார்வைகள் : 22785
உலகத் திரைப்பட இயக்குனர்களுக்கு பிடித்தமான 'லொகேஷன்' எது என கேட்டால் பிரான்சைத் தான் சொல்வார்கள்.. ஈஃபிள் கோபுரத்தில்.. இன்ன பிற அரங்குகளில்.. தெருக்களில்.. இப்படியெல்லாம் பிரான்ஸ் வந்துசெல்லும்!! தமிழ் சினிமா என்றால்.. 'ஜீன்ஸ்' திரைப்படத்தில் 'பூவுக்குள் ஒளிந்திருக்கும்!' பாடலின் ஒரு காட்சியில் இருந்து 'மெர்சல்' மேஜிக் ஷோ நடக்கும் அரங்கு வரை.. காலா காலமாக பிரான்சின் அழகை காட்டிக்கொண்டே தான் இருக்கிறார்கள். 'Superman' கூட ஒருதடவை ஈஃபிள் கோபுரத்தில் தொங்கியதாக ஞாபகம்...!!
இன்று பிரெஞ்சு புதினத்தில், Amélie பணிபுரிந்த பிரெஞ்சு கஃபே குறித்து பார்க்கலாம்!!
ப்ரெஞ்சு திரைப்பட இயக்குனர் Jean-Pierre Jeunet இயக்கத்தில், 2001 ஆம் ஆண்டு வெளியான Amélie திரைப்படம், சர்வதேச அளவில் பல பாராட்டுக்களையும், விருதுகளையும் குவித்தது. தவிர 10 மில்லியன் அமெரிக்க டொலர்களில் தயாரிக்கப்பட்டு, 172 மில்லியன் அமெரிக்க டொலர்களை வாரி சுருட்டி வசூல் வேட்டை நடத்திய திரைப்படம்.
Amélie எனும் தனிமையில் வாடும் பெண்ணின் வாழ்க்கையை மையமாக சித்தரிக்கிறது இத்திரைப்படம். கதாநாயகியான Amélie ஒரு பிரெஞ்சு கஃபேயில் பணி புரிவார். பல காட்சிகளின் தோன்றும் அந்த கஃபே.. இங்கு பரிசில்.. உங்கள் கண்முன்னே தான் உள்ளது.
Montmartre இல் வசிப்பதாக குறிப்பிடும் Amélie, Rue Lepic வீதியையும் Rue Cauchois வீதியையும் இணைக்கும் சந்தியில் உள்ள Café des 2 Moulins இல் தான் பணிபுரிவார். படத்தின் அனைத்து Café காட்சிகளையும் Café des 2 Moulins லேயே எடுத்திருப்பார்கள்.
இந்த கஃபேக்கு நீங்கள் முன்னதாக சென்றிருந்தால்... திரைப்படத்தை ஒருதடவை பாருங்கள்... 'அட.. ஆமாப்பா!' என ஆச்சரியப்படுவீர்கள்!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan