பரிஸ் : வீதிகளில் படுத்துறங்கும் 3,507 வீடற்றவர்கள்!

13 மாசி 2025 வியாழன் 09:00 | பார்வைகள் : 12314
பரிசில் 3,507 வீடற்றவர்கள் வீதிகளில், பூங்காக்களில், மெற்றோ சுரங்களில் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடற்றவர்களை கணக்கெடுக்கும் “Nuit de la Solidarité.” நிகழ்வு ஆண்டுதோறும் பரிசில் இடம்பெறுவது அனைவரும் அறிந்ததே.. இவ்வருடத்தில் ஜனவரி 23-24 ஆம் திகதிகளுக்கு உட்பட்ட இரவில் இந்த கணக்கெடுப்பு இடம்பெற்றது.. அதன் போதே இந்த வீடற்றவர்களின் எண்ணிக்கை தெரியவந்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெரிதளவில் மாற்றங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 3,492 வீடற்றவர்கள் வீதிகளில் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேவேளை, 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 17% சதவீத அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1