Paristamil Navigation Paristamil advert login

சிக்ஸர் மழையில் நனைந்த ரசிகர்கள்! 25 பந்தில் 50 ரன் அடித்த வீரர்

சிக்ஸர் மழையில் நனைந்த ரசிகர்கள்! 25 பந்தில் 50 ரன் அடித்த வீரர்

3 தை 2025 வெள்ளி 14:43 | பார்வைகள் : 4974


BBL லீக்கில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வீரர் ஃபின் ஆலன் 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். 

பெர்த்தில் சிட்னி தண்டர்(Sydney Thunder) மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்(Perth Scorchers) அணிகள் மோதும் BBL லீக் போட்டி நடந்து வருகிறது.

பெர்த் அணி முதலில் துடுப்பாடியது. மேத்யூ ஹர்ஸ்ட் 23 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

மறுமுனையில் ஃபின் ஆலன் (Finn Allen) சிக்ஸர் மழை பொழிந்து ருத்ர தாண்டவம் ஆடினார்.  

25 பந்துகளில் அரைசதம் அடித்த ஆலன் அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்.

12வது ஓவரில் அணியின் ஸ்கோர் 100ஐ எட்டிய நிலையில் ஆலன் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் குவித்தார். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்