பாலாவின் ‘வணங்கான்’ பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா?
30 மார்கழி 2024 திங்கள் 14:36 | பார்வைகள் : 5575
தமிழ் சினிமாவில் தனித்துவமிக்க படங்களை இயக்கி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் பாலா. இவரது இயக்கத்தின் தற்போது வணங்கான் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தினை வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
மேலும் இவருடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஸ்கின் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் மற்றும் சாம் சி எஸ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஆர் பி குருதேவ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து டீசர் , ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
அதே சமயம் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று (டிசம்பர் 30) இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடலும் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு அஜித்தின் விடாமுயற்சி, ராம் சரணின் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் வெளியாவதால் வணங்கான் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan