இலங்கையில் இரு குழுக்களுக்கு இடையில் பெரும் மோதல் - பலர் படுகாயம்
25 தை 2025 சனி 13:11 | பார்வைகள் : 13257
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடைப் பகுதியில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களையும் சேர்ந்த எட்டுப்பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அதில், நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
இரு குழுக்களிலும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் இந்த கைகலப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan