சூடானில் வெடிக்கும் வன்முறை - சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை
24 தை 2025 வெள்ளி 08:35 | பார்வைகள் : 4760
சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.
நாட்டில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதித்து தெற்கு சூடான் உத்தரவிட்டுள்ளது.
அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்நாட்டு கலவரமாக வெடித்துள்ளது.
இதில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இதற்கிடையே, கெசிரா மாநிலத்தில் தெற்கு சூடானின் போராளி குழுக்களால் கொலைகள் நடப்பதாக கூறும் சூடானின் காட்சிகளால் அப்பகுதி மக்கள் கோபமடைந்துள்ளனர்.
இதனால் தெற்கு சூடானில் உள்ள சூடானிய வர்த்தகர்களுக்கு சொந்தமான கடைகள் சூறையாடப்பட்டன.
தெற்கு சூடானில் கடந்த 17ம் தேதி ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் விதித்தனர். இந்நிலையில், அண்டை நாடான சூடானில் வன்முறை தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதித்து தெற்கு சூடான் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியம் என வலியுறுத்திய தேசிய தொடர்பு ஆணையம், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பிய உத்தரவின்படி 90 நாள் வரை நீட்டிக்கக் கூடிய தற்காலிக தடை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகின்றது.
அதேவேளை நிலைமை கட்டுக்குள் வந்தவுடன் இந்த உத்தரவு நீக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan