தன் மகளை பட்டினி போட்டு கொன்ற தாய். வழக்கு தொடங்கியது.
21 தை 2025 செவ்வாய் 09:53 | பார்வைகள் : 8093
பிரான்சில் Montpellier எனும் பகுதியில் 13 வயதான Amandine என்னும் பதின்ம வயது இளம் பெண் ஒருவர் 2020 தில் மாரடைப்பால் இறந்தார். இறக்கும் போது 13 வயதான Amandine 28 கிலோ நிறையும், 1.55 மீற்றர் உயரமும் கொண்டிருந்தார். இந்த மரணத்தில் இறந்தவரின் நிறை சந்தேகத்திற்குரியதாக இருந்துள்ளது.
கணவனை பிரிந்து வாழ்ந்த Amandine தாயாரான Sandrine Pissara தந்தையின் கண்ணில் படாமலும், பாடசாலைக்கு அனுப்பாமலும் வீட்டின் அறையொன்றில் மகளை அடைத்து வைத்து பட்டினி போட்டு சித்திரவதை செய்ததின் காரணமாகவே மரணம் சம்பவித்ததாக சந்தேகித்து வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நேற்றைய தினம் நீதி மன்றத்துக்கு வந்துள்ளது. மகளின் மரணம் குறித்து கண்கலங்கிய தந்தை "தன்னால் மகளின் உடலைப் பார்த்த காட்சிகளை தன் வாழ்நாளில் மறக்கவே முடியாது... இது ஒரு கெட்ட கனவு" என தெரிவித்துள்ளார். அதேவேளை குற்றம் சுமத்தப்பட்ட Sandrine Pissara அவர்களின் சட்டத்தரணி தெரிவிக்கையில் "Amandine சாவுக்கு முழுக்க முழுக்க அவரின் தாயாரான எனது கட்சிக்காரர்தான் பொறுப்பு என்று ஏற்றுக் கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளார். வழக்கின் விசாரணையின் முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட இருக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan