ஓடும் தொடருந்தில் குழந்தை பெற்ற பெண்!!

18 தை 2025 சனி 12:11 | பார்வைகள் : 7116
ஓடும் தொடருந்தில் பெண் ஒருவர் குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் பிரான்சின் தென்கிழக்கு பகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
Isère மாவட்டத்தில் உள்ள சிறிய நகரான Saint-Marcellin இல் இயங்கும் உள்ளூர் தொடருந்து ஒன்றில் பயணித்த 22 வயதுடைய பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார். Grenoble மற்றும் Valence நகரங்களிடையே பயணித்த தொடருந்து ஒன்றில் ஜனவரி 12, ஞாயிற்றுக்கிழமை காலை பயணித்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு தொடருந்தில் பயணித்த பெண் பயணிகள் உதவி செய்ய, தொடருந்திலேயே குழந்தை பிறந்துள்ளது.
அதை அடுத்து, தொடருந்து அடுத்து வந்த Saint-Marcellin நிலையத்தில் நிறுத்தப்பட்டு உதவிக்குழுவும் அழைக்கப்பட்டது. தொடருந்தில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அவருக்கு 3.4 கிலோ எடையுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம் என தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1