ஐந்து ஞாயிற்றுகிழமைகளுக்கு தடைப்படும் ஒன்பதாம் இலக்க மெற்றோ!!

17 தை 2025 வெள்ளி 16:01 | பார்வைகள் : 6076
ஒன்பதாம் இலக்க மெற்றோ சேவைகள்அடுத்த ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முற்று முழுதாக மூடப்பட உள்ளன.
ஜனவரி 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் மார்ச் மாதம் வரை ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் ஒன்பதாம் இலக்க மெற்றோ முற்று முழுதாக மூடப்பட உள்ளன. மேற்கு பகுதியான Pont-de-Sèvres நிலையம் தொடக்கம் கிழக்கு பகுதியான Mairie de Montreuil நிலையம் வரை முற்று முழுதாக சேவைகள் நாள் முழுவதும் தடைப்பட உள்ளன.
சேவைகளை நவீனமயமாக்கல் பணிகளுக்காக இச்சேவைத் தடை ஏற்பட உள்ளதாக RATP அறிவித்துள்ளது.
திங்கட்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு சேவைகள் வழமை போல் ஆரம்பிக்கும்.
நாளை மறுநாள் ஜனவரி 19 ஆம் திகதியும், பெப்ரவரி 2 ஆம் திகதியும், 16 ஆம் திகதியும், மார்ச் மாதத்தில் 9 மற்றும் 30 ஆம் திகதிகளிலும் இந்த சேவைத்தடை இடம்பெற உள்ளது. அன்றைய தினங்களில் மாற்றீடாக பேருந்து சேவைகள் இயக்கப்படும் என RATP அறிவித்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1