◉ இரண்டுவருட தொடர் அதிகரிப்பின் பின்னர்.. - பெப்ரவரியில் மின்சாரக்கட்டணம் குறைகிறது!!

16 தை 2025 வியாழன் 13:00 | பார்வைகள் : 7634
கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரான்சில் மின்சாரக்கட்டணம் தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததன் பின்னர், பெப்ரவரி மாதத்தில் முதன்முறையாக குறிப்பிடத்தக்க அளவு கட்டணம் குறைவடைய உள்ளது.
பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 15% சதவீதத்தால் மின்சாரக்கட்டணம் குறைவடைய உள்ளதாக எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் (Commission de régulation de l'énergie) அறிவித்துள்ளது. இந்த கட்டணக்குறைப்பினால் 24 மில்லியன் குடும்பங்கள் பலனடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மின் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ளதால், இந்த கட்டணக்குறைப்பு சாத்தியமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த கட்டணக்குறைப்பு தொடர்பில் இதுவரை அரச வர்த்தமானியில் தகவல் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1