பிரான்ஸ், அல்ஜீரியா இடையில் அரசியல் பதட்டம். கடும் கோபத்தில் Bruno Retailleau
11 தை 2025 சனி 08:40 | பார்வைகள் : 8243
மேற்கு சஹாரா மீது மொராக்கோவின் இறையாண்மையை பிரான்ஸ் அங்கீகரித்ததிலிருந்து, பிரான்ஸ் மற்றும் அல்ஜீரியா இடையே பதட்டமான அரசியல் சூழ்நிலை நிலவிவரும் நிலையில் அண்மையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Bruno Retailleau "பிரான்ஸை அவமானப்படுத்த அல்ஜீரியா விரும்புகிறது" என கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரான்சில் வசிக்கும் அல்ஜீரியா பிரஜையான 59 வயதான Boalem Naman எனும் நபரை பிரான்ஸ் நாடு கடத்தி அல்ஜீரியாவிற்கு அனுப்பியது, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் எற்கனவே 11 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட குறித்த நபர்; அரசியல் எதிரிக்கு எதிராக வன்முறைக்கு அழைப்பு விடுக்கும் வீடியோவை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை Montpellier கைது செய்யப்பட்டு பின்னரே அல்ஜீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
நாடு கடத்தப்பட்ட அவரை அல்ஜீரியா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவரை உடனடியாகவே பிரான்ஸிற்க்கு மீண்டும் அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் செயல் பிரான்சுக்கும் அல்ஜூரியாவுக்கு விடையில் ஒரு அரசியல் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது என கூறப்படுகிறது
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan