அமெரிக்க ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய மக்ரோன்! - லெபனானில் யுத்த நிறுத்தம்!!

23 கார்த்திகை 2024 சனி 13:52 | பார்வைகள் : 9200
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தொலைபேசி வழியாக உரையாடியுள்ளார். லெபனானில் யுத்த நிறுத்தம் கொண்டுவருவது தொடர்பில் இருவரும் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 22, நேற்று வெள்ளிக்கிழமை இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. மத்திய கிழக்கில் பதட்டமான சூழ்நிலை இடம்பெற்று வருவதை அடுத்து, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவுக்கும் இடையே இடம்பெறும் மோதலை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் குறித்து இருவரும் உரையாடியதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இரு தரப்பும் மிக மோசமான தாக்குதலை மேகொண்டு வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1