பத்துமணிநேரத்துக்கும் மேலாக தரித்து நிற்கும் கனரக வாகனங்கள்!!

22 கார்த்திகை 2024 வெள்ளி 17:00 | பார்வைகள் : 8345
கடும் பனிப்பொழிவுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கான கனரக வாகங்கள் பத்துமணிநேரத்துக்கும் மேலாக வீதிகளில் தடைப்பட்டு நிற்கின்றன.
பிரான்சின் கிழக்கு மாவட்டமான Doubs இனை ஊடறுக்கும் A36 நெடுஞ்சாலையில் இந்த கொடூரம் இடம்பெற்றுள்ளது. 2,000 தொடக்கம் 2,500 வரையான கனரக வாகனங்கள் காலை 5 மணி முதல் வீதியில் ஒரு இஞ்ச் கூட நகராமல் அங்கேயே தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு சில வாகனங்கள் நேற்று இரவு முதலே அங்கு சிக்குண்டு நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக பனிப்பொழிவு காரணமாக பல வீதி விபத்துக்கள் இடம்பெற்றதாகவும், அதை அடுத்து இந்த நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலைக்குள் வாகன நெரிசல் அகற்றப்படவில்லை என்றால் நிலமை மேலும் மோசமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1