பனிப்பொழிவு : ஈஃபிள் கோபுரம் மூடப்படுகிறது!

21 கார்த்திகை 2024 வியாழன் 17:25 | பார்வைகள் : 8508
பரிசில் கொட்டித்தீர்க்கும் பனிப்பொழிவை அடுத்து, ஈஃபிள் கோபுரம் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை முதல் கொட்டிவரும் பனிப்பொழிவினால், ஈஃபிள் கோபுரத்தின் உச்சி கண்களின் பார்வையில் இருந்து மறைந்துள்ளது. ஆனால் காலை முதல் ஈஃபிள் கோபுரம் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பனிப்பொழிவு மிகவும் கடுமையாக ஏற்பட்டுள்ளதை அடுத்து பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 22, வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி வரை ஈபிள் கோபுரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1