tickets restaurants : காலக்கெடு நீடிப்பு!!
21 கார்த்திகை 2024 வியாழன் 09:24 | பார்வைகள் : 13052
உணவங்களுக்காக வழங்கப்பட்டுள்ள வவுச்சர்களின் (tickets restaurants) காலக்கெடு அவசர அவசரமாக நீடிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு கொவிட் 19 காலத்தின் போது வழங்கப்பட்ட இந்த ஊழியர்களுக்கான உணவக வவுச்சர்கள் 2023 ஆம் ஆண்டு டிசம்பருடன் நிறைவடைய இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் வரை அது பிற்போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது 2026 ஆம் ஆண்டு டிசம்பர் வரை அவை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நவம்பர் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக கூடிய இந்த சபையில், இந்த ‘நீடிப்பு’ தொடர்பில் வாக்கெடுக்கப்பட்டது. இதில் 75 ஆதரவு வாக்குகளும், 0 எதிர்ப்பு வாக்குகளும் பதிவாகியிருந்தன.
அதை அடுத்து, 2026 ஆம் அண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை மக்கள் அவர்களிடம் உள்ள வவுச்சர்களை பயன்படுத்த முடியும்.
கடந்த கொவிட் 19 காலத்தின் போது பிரான்ஸ் பாரிய பணவீக்கத்தினைச் சந்தித்திருந்தது. அதன்போது வாங்கும் திறன் ( pouvoir d'achat ) மக்களிடம் வீழ்ச்சியடைந்திருந்தது. அதற்காக கொண்டுவரப்பட்ட இந்த திட்டமே வவுச்சர்கள் வழங்குவதாகும். 5.4 மில்லியன் ஊழியர்கள் இதில் பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சர்களை பயன்படுத்தி ஊழியர்கள் மாவு, பாஸ்தா, அரிசி, இறைச்சி போன்றவற்றை நேரடியாக கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan