Paristamil Navigation Paristamil advert login

Caetano : பனிப்புயல்! - அவதானம்!

Caetano : பனிப்புயல்! - அவதானம்!

20 கார்த்திகை 2024 புதன் 18:24 | பார்வைகள் : 8275


Caetano என பெயரிடப்பட்ட பனிப்புயல் நாளை நாட்டின் பெரும்பாலான இடங்களை தாக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்சின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கிச் சென்று கரையைக் கடக்கிறது இந்த பனிப்புயல்.

நாளை, நவம்பர் 21 ஆம் திகதி வியாழக்கிழமை நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் பனிப்புயல் வீசும் எனவும், இல் து பிரான்சின் சகல மாவட்டங்களிலும் பனிப்பொழிவு பதிவாகும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. தலைநகர் பரிசில் 3 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகும் எனவும், இல் து பிரான்சுக்குள் அதிகபட்சமாக Essonne மாவட்டத்தில் 7 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல் து பிரான்சின் சகல மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 49 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்