ஆயுதப்பயன்பாட்டைக் குறைந்துள்ள காவல்துறை!!
20 கார்த்திகை 2024 புதன் 09:00 | பார்வைகள் : 7040
காவல்துறையினர் தங்களது ஆயுதங்களை பயன்படுத்துவது கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினரைக் கண்காணிக்கும் சிறப்பு படையினரான IGPN இதனை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் காவல்துறையினர் பயன்படுத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பிலான விளக்கங்களும், கைவசம் மீதமிருக்கும் சன்னங்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கு சமர்ப்பிக்கவேண்டும். அதன்படி 2023 ஆம் ஆண்டில் 161 துப்பாக்கிச்சூடுகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 37% சதவீதத்தால் வீழ்ச்சியாகும். 2022 ஆம் ஆண்டில் 255 துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றிருந்தன.
அதேவேளை, 2023 ஆம் ஆண்டில் 3 பேர் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர். 2022 ஆம் ஆண்டில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
அதேவேளை, கலவரம் அடக்கும் காவல்துறையினர் பயன்படுத்தும் இறப்பர் குண்டுகளைக் கொண்ட LBD துப்பாக்கிச்சூடுகள் அதிகரித்துள்ளன. 2022 ஆம் ஆண்டில் 2,889 துப்பாக்கிச்சூடுகளும், 2023 ஆம் ஆண்டில் 4,583 துப்பாக்கிச்சூடுகளும் இடம்பெற்றிருந்தன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan