Paristamil Navigation Paristamil advert login

Samuel Paty : நினைவுச் சின்னம் சிதைப்பு.. விசாரணைகள் ஆரம்பம்!

Samuel Paty : நினைவுச் சின்னம் சிதைப்பு.. விசாரணைகள் ஆரம்பம்!

18 கார்த்திகை 2024 திங்கள் 17:56 | பார்வைகள் : 7068


பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பேராசியர் Samuel Paty இற்காக பரிசில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம் ஒன்று சிதைக்கப்பட்டுள்ளது. இந்த நாசகார வேலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பரிஸ் 5 ஆம் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடத்தில், நவம்பர் 17, நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாமுவேல் பற்றி எனும் அவரது பெயர் பொறிக்கப்பட்ட இடத்தினை சில விஷக்கிருமிகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

குறித்த நினைவுச் சின்னம், பேராசிரியர் கொல்லப்பட்ட முதலாவது ஆண்டு நினைவாக, 2021, ஒக்டோபர் 16 ஆம் திகதி அன்று திறந்துவைக்கப்பட்டிருந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்