பரிசுகளோடு தயாரான நாக சைதன்யா சோபிதா திருமண அழைப்பிதழ்
18 கார்த்திகை 2024 திங்கள் 14:59 | பார்வைகள் : 4608
நாக சைதன்யா - சோபிதா துலிபாலா ஜோடியின் திருமணம் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருமண தேதி நெருங்கி வருவதால் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. திருமண அழைப்பிதழுடன் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. நாக சைதன்யா-சோபிதா ஜோடியின் திருமண அழைப்பிதழ் குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
திருமண அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அதில் மணமகன் நாக சைதன்யாவின் தாயுடன், மாற்றாந்தாய் மற்றும் தந்தையின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. நாக சைதன்யா, நாகார்ஜுனா மற்றும் அமலாவின் மகன் என்று அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு கீழே சரத் விஜயராகவன் மற்றும் லட்சுமி கமலா ஆகியோர் பெயர் அச்சிடப்பட்டுள்ளது. நாக சைதன்யாவிற்கு அமலா மாற்றாந்தாய், சரத் மாற்றாந்தந்தை ஆவார். மேலும், அழைப்பிதழில் ANR தம்பதியினர் மற்றும் D. ராமானாயுடு தம்பதியினரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
சோபிதா துலிபாலாவின் வீட்டில் திருமண கொண்டாட்டங்கள் கடந்த மாதமே தொடங்கிவிட்டன. அந்த புகைப்படங்களை சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்து திருமண பாரம்பரியத்தில் மஞ்சள் அரைப்பது மிக முக்கியமான சடங்குகளில் ஒன்றாகும். இந்த நிகழ்வுடன் சோபிதா-நாக சைதன்யாவின் திருமண விழாக்கள் தொடங்கியுள்ளன.
இவர்களது திருமணம் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளதாம். அங்குதான் திருமண ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நாக சைதன்யா-சோபிதா இருவரும் காதலித்து வருகின்றனர். அவ்வப்போது அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் கசிந்தன. காதல் வதந்திகளை இந்த ஜோடி பலமுறை மறுத்தனர். திடீரென்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து அதிர்ச்சி அளித்தனர்.
சோபிதா - நாக சைதன்யாவின் திருமணத்தை முன்னிட்டு ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சோபிதா துலிபாலா ஆந்திரப் பிரதேச மாநிலம், தெனாலியில் பிறந்த தெலுங்குப் பெண். அவர் மாடலிங் செய்துள்ளார். மும்பையில் அவரது வாழ்க்கை தொடங்கியது. பாலிவுட்டில் சோபிதா அதிக படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் 'குடாச்சாரி', 'மேஜர்' படங்களில் நடித்துள்ளார். படப்பிடிப்பில் உள்ள 'குடாச்சாரி 2' படத்திலும் சோபிதா நடிக்கிறார் என்ற தகவல் உள்ளது. இதுதவிர 'மங்கி மேன்' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan