ஜெயம் ரவி – ஆர்த்தி மீண்டும் இணைவார்களா ?
21 மார்கழி 2024 சனி 12:35 | பார்வைகள் : 4169
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் மனம்விட்டு பேச குடும்ப நல நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.மீண்டும் இணைவார்களா ஜெயம் ரவி - ஆர்த்தி?.... ஒரு மணி நேரத்திற்கு மேலாக சமரச பேச்சுவார்த்தை!
திருமண வாழ்க்கை என்பது ஒரு சிலருக்கு தென்றலாகவும் ஒரு சிலருக்கு புயலாகவும் அமைந்துவிடுகிறது. அதன்படி தம்பதியினர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்போது வாழ்க்கை என்பது தென்றலாகவும் சிறு சிறு மனக் கசப்புகளை பிரச்சனைகளாக பார்க்கும்போது அது புயலாகவும் மாறிவிடுகிறது. அதாவது இந்த உலகத்தில்Perfect Match என்ற ஒன்று கிடையாது.
வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழும்போதுதான் Perfect Match என்பதற்கான அர்த்தமே இருக்கிறது. இதை பலரும் புரிந்து கொண்டால் விவாகரத்து போன்ற பிரச்சனைகளை களையலாம். அடுத்தது திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டது. ஆனால் இன்றைய தலைமுறையினர் அதை ஒரு நாள் கூத்தாக நினைத்து அதன் மதிப்பை உணராமல் விவாகரத்து என்ற பாதையை தேடி ஓடுகின்றனர்.
அதிலும் சமீப காலமாக திரைப் பிரபலங்களின் விவாகரத்துகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரின் விவாகரத்து விவகாரம் பெரும் பேசும் பொருளாகியுள்ளது.
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்த நிலையில் ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
தற்போது மீண்டும் குடும்பநல நீதிமன்றம் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் மனம் விட்டு பேச வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சமரச தீர்வு மையத்தில் ஜெயம் ரவியின் ஆர்த்தியும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாக இருக்கிறது.
பொதுவாக கணவன் -மனைவி இருவரும் விவாகரத்து என்று நீதிமன்றத்திற்கு வந்தால் அவர்களுக்கு உடனடியாக விவாகரத்து வழங்கப்படுவதில்லை. இது போன்ற மனம் விட்டு பேச அவர்கள் வலியுறுத்தப்படுவார்கள். அப்படி பேசும்போது அவர்கள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் இந்த வாய்ப்பை ஜெயம் ரவியும் ஆர்த்தியும் பயன்படுத்தி கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan