ரொறன்ரோவில் விடுக்கப்பட்டுள்ள பயண அறிவுறுத்தல்

20 மார்கழி 2024 வெள்ளி 04:56 | பார்வைகள் : 4569
கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதிகளுக்கு பயண அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் ஏற்படக்கூடிய கடுமையான பனிப்பொழிவு நிலைமைகள் காரணமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. தாழமுக்க நிலைமையினால் கூடுதல் அளவில் பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக வீதிப் போக்குவரத்து மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணம் செய்ய வேண்டும் எனவும், பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்வது பொருத்தமானது எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1