Paristamil Navigation Paristamil advert login

வவுனியாவில் அரச ஊழியர் சடலமாக மீட்பு

வவுனியாவில் அரச ஊழியர் சடலமாக மீட்பு

15 மார்கழி 2024 ஞாயிறு 14:06 | பார்வைகள் : 4337


வவுனியா, சேமமடு குளத்தின் வான் பகுதியில் இருந்து,  மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த நிரஞ்சன்  என்ற அரச ஊழியரின்   சடலம் ஞாயிற்றுக்கிழமை  மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த இளைஞர் வனயீவராசிகளின் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும் பணி செய்து வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் சனிக்கிழமை மாலை குறித்த இளைஞன் சேமமடு குளத்தின் ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளதுடன் நீண்ட நேரமாகியும்   அவர் காணாததால் நண்பர்கள் தேடியுள்ள நிலையில் அவரது சடலம் இன்று காலை குறித்த ஆற்றுப்பகுதியில் இருந்து இளைஞர்களால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்