பரிஸ் : ஒலிம்பிக் வீரர் Amaury Leveaux வீட்டில் கொள்ளை!!

12 மார்கழி 2024 வியாழன் 11:52 | பார்வைகள் : 5717
ஒலிம்பிக் நீச்சல் வீரர் Amaury Leveaux
வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளது. பல மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று டிசம்பர் 11, புதன்கிழமை இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து கொள்ளையிட்டுக்கொண்டு சென்றதாகவும், பாதுகாப்பு பெட்டகம் ஒன்று திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நகைகள், விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரம் உள்ளிட்ட 380,000 யூரோக்கள் பெறுமதியுடைய பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1