பரிஸ் : வைத்தியர்களை அனுகுவதில் - இரண்டில் ஒருவர் பாதிக்கப்படுகின்றனர்!!

5 மார்கழி 2024 வியாழன் 17:18 | பார்வைகள் : 8347
தலைநகர் பரிசில் மருத்துவர்களை சந்திப்பது பெரும் சவாலான விஷயமாக மாறி வருகிறது. பரிசில் வசிக்கும் மக்களில் இரண்டில் ஒருவருக்கும் அதிகமானோர் மருத்துவர்களை சந்திப்பதில் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
பொது மருத்துவருக்கான (médecin généraliste) தேவை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் பரிசில் வசிப்பவர்களில் 54% சதவீதமானவர்கள் பொது மருத்துவர்களைச் சந்திப்பதில் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள எண்ணிக்கையை விட பரிசில் அதிகமாகும்.
பிரான்சில் வசிப்பவர்களில் 43% சதவீதமானவர்கள் பொது மருத்துவர்களைச் சந்திப்பதில் சிரமம் எதிர்கொள்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவக்கட்டணங்கள், மருத்துவர்களை உடனடியாக சந்திக்க முடியாதவாறு உள்ளமை என பல்வேறு காரணிகள் இதன் பின்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1