முதல் முறையாக பிக்பாஷ் கிண்ணத்தை கைப்பற்றிய Melbourne Renegades Women

2 மார்கழி 2024 திங்கள் 08:21 | பார்வைகள் : 5869
மகளிர் பிக்பாஷ் லீக் கிண்ணத்தை மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி முதல் முறையாக வென்றது.
மெல்போர்னில் நடந்த மகளிர் பிக்பாஷ் லீக் இறுதிப்போட்டியில், மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின.
முதலில் ஆடிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் (Melbourne Renegades) அணி 9 விக்கெட்டுக்கு 141 ஓட்டங்கள் எடுத்தது.
ஹேலே மேத்யூஸ் (Hayley Matthews) 61 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் விளாசினார்.
அதன் பின்னர் மழை காரணமாக பிரிஸ்பேன் ஹீட் (Brisbane Heat) அணிக்கு 12 ஓவர்களில் 98 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
அடுத்து களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி 6 விக்கெட்டுக்கு 90 ஓட்டங்கள் எடுத்ததால், மெல்போர்ன் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணித்தலைவர் ஜெஸ் ஜோனசென் 28 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி முதல் முறையாக பிக்பாஷ் லீக் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1