இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

26 ஐப்பசி 2024 சனி 13:33 | பார்வைகள் : 5240
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் தங்களது பயணத்தை குறைக்குமாறும் பணியிடங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும், இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.
ஈரானில் தெரிவு செய்யப்பட்ட பல இடங்களில் இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக, தூதுவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இஸ்ரேலிலும் இந்த நிலைமை உருவாகும் என அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு தூதுவர் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஈரான், ஈராக், லெபனான், சிரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வான்பரப்பில் விமானங்கள் பயணிக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக, தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1