மெற்றோவில் “Anti Juif” எனும் வாசகம் பொறிக்கப்பட்ட உடையுடன் பயணித்த ஒருவர். விசாரணைகள் ஆரம்பம்!!
23 ஐப்பசி 2024 புதன் 09:00 | பார்வைகள் : 9803
மெற்றோவில் பயணித்த ஒருவர் ‘யூத மதத்துக்கு எதிரானவர்’ எனும் பொருட்பட ‘Anti Juif’ எனும் வாசகம் அச்சடிக்கப்பட்ட சீருடை ஒன்றை அணிந்துகொண்டு பயணித்துள்ளார். மதங்கள் மீதான தாக்குதல்களுக்கும், வெறுப்புகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குறித்த சீருடை அணிந்த நபர் தேடப்பட்டு வருகிறார்.
பரிசில் உள்ள Saint-François-Xavier மெற்றோ நிலையத்தில் திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. நபர் ஒருவர் மேற்படி வாசகம் எழுதப்பட்ட கறுப்பு நிற சீருடை ஒன்றை அணிந்துகொண்டு பயணித்துள்ளார். அவரை புகைப்படம் எடுத்த சிலர் தங்களுடைய கண்டன குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் RATP நிறுவனம் கண்டனம் வெளியிட்டுள்ளது. வெறுக்கத்தக்க செயல் எனவும், மதங்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்படவேண்டியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை ஆரம்பித்துள்ள பரிஸ் காவல்துறையினர் குறித்த நபரைத் தேடி வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan