Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் வெள்ள அனர்த்தம்.. இல் து பிரான்சின் சில இடங்களிலும் பாதிப்பு!

மீண்டும் வெள்ள அனர்த்தம்.. இல் து பிரான்சின் சில இடங்களிலும் பாதிப்பு!

23 ஐப்பசி 2024 புதன் 04:32 | பார்வைகள் : 8737


கடந்த வாரம் நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் மழை வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வாரம் மீண்டும் மழை ஆரம்பித்துள்ளது. இன்று ஒக்டோபர் 23 புதன்கிழமை நாட்டின் 14 மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Allier, Cher, Eure, Eure-et-Loir, Ille-et-Vilaine, Indre-et-Loire, Loir-et-Cher, Nièvre, Oise, Orne, Saône-et-Loire, Seine-Maritime, Yvelines மற்றும் Val-D'Oise ஆகிய 14 மாவட்டங்களுக்கு வெள்ளம் காரணமாக ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும், இடி மின்னல் தாக்குதல்களுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.  

மூன்று நாட்களுக்கு முன்னர், ஒக்டோபர் 20 ஆம் திகதி Ardèche மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படுத்திய  குழியில் 80 வயது பெண்மணி ஒருவர் தவறி விழுந்து பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்