காட்டுப் பன்றியினால் இருவர் பலி!!

19 ஐப்பசி 2024 சனி 20:00 | பார்வைகள் : 8687
வீதியில் பயணித்த மகிழுந்துடன் காட்டுப் பன்றி ஒன்று மோதியதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
Bordeaux நகரின் கிழக்கு பகுதியில் இச்சம்பவம் இன்று ஒக்டோபர் 19, சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதிகாலை 4 மணிக்கு வீதியில் விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றுள்ளனர்.
மகிழுந்து ஒன்று வீதியில் இருந்து விலகி மரம் ஒன்றில் மோதியுள்ளது. அதில் பயணித்த 18 மற்றும் 19 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்டமைக்கு திடீரென வீதியினை குறுக்கறுத்துச் சென்ற காட்டுப்பன்றிகளே காரணம் எனவும், மகிழுந்துடன் பன்றி ஒன்று திடீரென மோதியதில் மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1