சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதல் - 7 பேர் பலி

18 ஐப்பசி 2024 வெள்ளி 14:40 | பார்வைகள் : 6191
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியாவின் தலைநகர் மொகதிசுவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தற்கொலைப்படை தாக்குதல் பொலிஸ் அகாடமி அருகே நேற்று இடம்பெற்றுள்ளது.
அல்கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்புப்படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1