இங்கிலாந்தில் வீடு வெடித்து கோர விபத்து - சிறுவன் பலி
17 ஐப்பசி 2024 வியாழன் 14:53 | பார்வைகள் : 7420
இங்கிலாந்து நாட்டின் நியூகேசில் நகருக்குட்பட்ட பென்வெல் பகுதியில் வயலட் குளோஸ் என்ற இடத்தில் வீடு ஒன்று நேற்று காலை திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட வெடிசத்தம் அந்த பக்கத்தில் வசிப்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்து நார்தம்பிரியா பொலிசார் சம்பவ பகுதிக்கு சென்றதுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் அங்கு சென்றனர்.
வீடு வெடித்ததும் ஏற்பட்ட தீயை அதிகாரிகள் போராடி அணைத்து விட்டபோதும் சம்பவத்தில், அந்த வீடு முற்றிலும் சேதமடைந்ததுடன், அதன் மேற்கூரைகள் இருபுறமும் இடிந்து விழுந்தன.
சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதில், 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மற்றவர்கள், சம்பவ பகுதிக்கு அருகேயுள்ள வீடுகளில் இருந்து மீட்கப்பட்டு, பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதேசமயம் வீடு வெடித்ததற்கான காரணம் பற்றி உடனடியாக எந்த விவரமும் தெரிய வரவில்லை.
இச்சம்பவத்தில் 6 பிளாட்டுகளுக்கு பலத்த பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan