மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
17 ஐப்பசி 2024 வியாழன் 10:44 | பார்வைகள் : 6108
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் குறிப்பாக லெபனானில் இடம்பெறும் மோதல் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்படுகிறது.
அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு இலங்கையின் தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை தூதரகங்களினூடாக வழங்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அங்குள்ள இலங்கையர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவசர சந்தர்ப்பங்களில் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் தங்களது உறவினர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்களையும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, 011 233 8812 அல்லது 011 771 1194 என்ற வெளிவிவகார அமைச்சின் இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி மத்திய கிழக்கில் உள்ள தங்களது உறவினர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan