ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்ஸி...! உலகக்கிண்ண தகுதிச்சுற்றில் ருத்ரதாண்டவம்
16 ஐப்பசி 2024 புதன் 09:13 | பார்வைகள் : 5016
பொலிவியா அணிக்கு எதிரான உலகக்கிண்ண தகுதிச்சுற்று கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
Estadio Mas Monumental மைதானத்தில் நடந்த உலகக்கிண்ண தகுதிச்சுற்று கால்பந்து போட்டியில், அர்ஜென்டினா மற்றும் பொலிவியா அணிகள் மோதின.
இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா முதல் பாதியில் 3 கோல்கள் அடித்தது.
நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி (19) மார்டினஸ் (43) மற்றும் ஜூலியன் ஆல்வாரெஸ் (45+3) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இரண்டாம் பாதியின் 69வது நிமிடத்தில் தியாகோ அல்மடா கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து மெஸ்ஸி 84 மற்றும் 86வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் என ஹாட்ரிக் அடித்தார்.
பொலிவியா அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியாததால், அர்ஜென்டினா 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan