இலங்கையில் மோசமடையும் காலநிலை - தயார் நிலையில் விமான படையினர்
13 ஐப்பசி 2024 ஞாயிறு 13:05 | பார்வைகள் : 4820
தற்போதைய பாதகமான காலநிலை காரணமாக, அவசரநிலைகளை எதிர்பார்த்து விமானங்களையும் துருப்புகளையும் தயார் நிலையில் வைக்குமாறு இலங்கை விமானப்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருக்குமாறு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, அறிவுறுத்தியுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் எரந்த கீகனகே தெரிவித்தார்.
பேரிடர் சூழ்நிலைகளை வானத்தில் இருந்து கண்காணிக்கவும், கண்காணிப்பு விமானங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் அவர் விமானப்படைக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பெல்-412 உலங்குவானூர்தி இரத்மலானை விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அதேவேளை இரண்டு பெல்-212 உலங்குவானூர்திகள் ஹிங்குராங்கொட மற்றும் பலாலி விமானப்படைத் தளங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
சிறப்பு பயிற்சி பெற்ற விமானப்படை ரெஜிமென்ட் சிறப்புப் படைகளும் இந்த தளங்களில் தயார் நிலையில் உள்ளதாகவும், தேவைப்படும் போது மீட்பு நடவடிக்கைகளில் உதவுவதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan