Paristamil Navigation Paristamil advert login

இளமையான தோற்றத்தில் எம்.எஸ்.டோனி - புகைப்படம் வைரல்

இளமையான தோற்றத்தில் எம்.எஸ்.டோனி - புகைப்படம் வைரல்

12 ஐப்பசி 2024 சனி 12:05 | பார்வைகள் : 5824


இந்திய அணியின் வெற்றிகர கேப்டன்களில் ஒருவர் எம்.எஸ். டோனி. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்ட எம்.எஸ். டோனி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். உலகளவில் எம்.எஸ். டோனிக்கு ரசிகர்கள் அதிகம்.

வரும் ஐபிஎல் தொடரில் அப்கேப்புடு வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.டோனி விளையாடுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எம்.எஸ்.டோனியின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

சென்ற வருடம் ஐபிஎல் தொடரின்போது, நீண்ட முடியுடன் வலம் வந்த டோனி தற்போது இந்த புதிய லுக்கில் இளமையாக தோற்றமளிக்கிறார்.

அவ்வப்போது தனது சிகை அலங்காரத்தை மாற்றி, மிகவும் 'ட்ரெண்டிங்'ஆக இருக்கும் தோனியின் தற்போதைய லுக் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்