Vélizy-Villacoublay : உழவு இயந்திரங்களில் படையெடுக்கும் விவசாயிகள்!

17 கார்த்திகை 2024 ஞாயிறு 15:52 | பார்வைகள் : 10015
பல்வேறு விவசாய அமைப்புக்களைச் சேர்ந்த விவசாயிகள், இன்று நண்பகலின் பின்னர் Vélizy-Villacoublay (Yvelines) நகர் நோக்கி படையெடுத்துள்ளனர்.
தங்களது உழவு இயந்திரங்களை வீதிகளில் நிறுத்தி, போக்குவரத்தை தடை செய்து தங்களது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். Vélizy-Villacoublay பகுதியில் உள்ள 107 ஆவது இராணுவ விமானதளத்துக்கு அருகே அவர்கள் குவிந்துள்ளனர்.
A10, RN104, RN20, RD74, RD17, RD 117, RD19, RN12, RD44 ஆகிய சாலைகள் போக்குவரத்து தடையைச் சந்தித்துள்ளன. மாலை 4 மணி முதல் அவர்கள் வீதிகளை முடக்க தொடங்கியுள்ளனர்.
பரிசுக்குள் நுழையும் அனைத்து தென்மேற்கு பிராந்திய சாலைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. முதற்கட்டமாக நாளை திங்கட்கிழமை நண்பகல் வரை இந்த போராட்டம் இடம்பெற உள்ளதாகவும், டிசம்பர் மாத நடுப்பகுதி வரை இதுபோன்று அவ்வப்போது ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1