டி20யில் மிரட்டிய இலங்கையின் முக்கிய வீரர் விலகல்

12 கார்த்திகை 2024 செவ்வாய் 12:41 | பார்வைகள் : 3523
இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில், அபாரமாக விளையாடிய இலங்கையின் வனிந்து ஹசரங்கா தொடர் விருதை கைப்பற்றினார்.
ஆனால், ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர் இரண்டாவது டி20 போட்டியில் காயமடைந்தார்.
அவருக்கு இடது தொடை தசையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருநாள் தொடரில் இருந்து ஹசரங்கா விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக துஷன் ஹேமந்தா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் பல்லேகேலேவில் நாளை நடக்கிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1