ஊழல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை: பிரதமர் மோடி உறுதி
11 கார்த்திகை 2024 திங்கள் 03:49 | பார்வைகள் : 7796
ஊழல் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பொகாரோ என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்., ஜே.எம்.எம்., கட்சிகள் இணைந்து மாநிலத்தை கொள்ளையடிக்கின்றன. மக்களிடம் இருந்து பணத்தை இம்மாநில அரசு கொள்ளையடிக்கிறது. இங்கு நடந்த சோதனையில் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஊழல்வாதிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இதனை நீதிமன்றம் மூலம் பெற்றுத்தருவோம். உங்களின் பணம் உங்களுக்காக செலவு செய்யப்படும்.
அடுத்ததாக ஜார்க்கண்டில் வினாத்தாள் கசிவு, ஆட்கள் தேர்வுக்கு என மாபியாக்களை ஜே.எம்.எம்., காங்கிரஸ் கூட்டணி உருவாக்கி உள்ளது. அவர்கள் மீதான தாக்குதல் தொடரும். அத்தகையவர்களில் ஒவ்வொருவரையும் பிடித்து சிறையில் அடைப்போம். இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைப்பவர்களின் திட்டங்களை பா.ஜ., முறியடிக்கும்.
காங்கிரஸ், தனது 10 ஆண்டு கால ஆட்சியில் இம்மாநிலத்திற்கு ரூ.80 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கியது. பா.ஜ., வின் 10 ஆண்டு ஆட்சியில் ரூ. 3 லட்சம் கோடி வழங்கப்பட்டு உள்ளது. இது நான்கு மடங்கு அதிகம். ஜார்க்கண்டை உருவாக்கியவர்கள் நாங்கள். அதன் வளமான எதிர்காலத்திற்கு நாங்கள் பொறுப்பு.மாநிலத்தை வளர்ச்சி பெற செய்ய உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்.
இதர பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் பட்டியலில் 125 துணைப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இட ஒதுக்கீடு வழங்கி அவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. நாம் ஒற்றுமையாக இருந்தால், எப்போதும் பாதுகாப்பாக இருப்போம்.
நமது பெண்கள் இடைத்தரகர்கள் இன்றி அரசின் மானியத்தை நேரடியாக பெற தகுதி பெற்றுள்ளனர். அரசின் பணம் உங்களின் உரிமை. அது உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் செலவு செய்ய வேண்டும். மத்திய அரசிடம் இருந்து ஏராளமான பணம் மாநில அரசுக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது. முன்னர் இதனை வைத்து முறைகேடு நடந்தது. அனைத்து இடங்களிலும் கொள்ளையர்கள் உள்ளனர். தற்போது தொழில்நுட்பம் மூலம் உங்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan