Paristamil Navigation Paristamil advert login

காசாவில் கடந்த இரண்டு  நாட்களில் 50 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி

காசாவில் கடந்த இரண்டு  நாட்களில் 50 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி

4 கார்த்திகை 2024 திங்கள் 09:19 | பார்வைகள் : 5805


இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஒரு வருடத்துக்கு மேலாக நீடித்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களில் மாத்திரம் காசா வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்ட சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான மக்கள் செறிந்து வாழும் இரண்டு தொடர் மாடிகள் தாக்கப்பட்டதையடுத்தே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கெதரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.

அதேசம்யம் தாக்குதலின்போது , போலியோ தடுப்பூசி வழங்கிக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பணியாளர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்