Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு -  9 பேர் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு -  9 பேர் பலி

4 கார்த்திகை 2024 திங்கள் 08:52 | பார்வைகள் : 5297


இந்தோனேசியாவின் நுசா டெங்கரா மாகாணத்தின் பிளோர்ஸ் தீவிலுள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அப்பகுதியில் உள்ள கிராமங்களை எரிமலையில் இருந்து வெளிவந்த கரும்புகை சூழ்ந்தது.

எரிமலையில் இருந்து தீக்குழம்பும் வெளிவந்தது.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டுள்ளனர்.

இதேவேளை, தொடர் எரிமலை சீற்றத்துடன் காணப்படுவதால் மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்