அடுத்த கட்ட நடவடிக்கை: த.வெ.க., நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
3 கார்த்திகை 2024 ஞாயிறு 07:16 | பார்வைகள் : 6600
த.வெ.க.,வின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கி உள்ளார். இக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27 ம் தேதி நடந்தது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விஜய்யை, சீமான் உள்ளிட்டோர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு விஜய் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. விஜய் தலைமையில் நடக்கும் இந்தக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என 138 பேர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை, பொறுப்பாளர் நியமனம் உள்ளிட்டவை குறித்தும், கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் எனக்கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan