இரவு நேர வன்முறை.. இரு பேருந்துகள் தீக்கிரை... காவல்துறை வீரர் காயம்!

2 கார்த்திகை 2024 சனி 09:01 | பார்வைகள் : 11675
பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் வழிமறிக்கப்பட்டு அவரை எரியூட்டப்பட்டுள்ளன. காவல்துறை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் Lyon (Rhône) நகருக்கு அருகே உள்ள Rillieux-la-Pape பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று நவம்பர் 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில், கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட குழு ஒன்று வீதிக்கு இறங்கு வன்முறையில் ஈடுபட்டது. வீதிகளில் பயணித்த இரு பேருந்துகளை தடுத்து நிறுத்தி அதனை பெற்றோல் ஊற்றி எரித்துள்ளனர்.
உடனடியாக அங்கு கலவரம் அடக்கும் காவல்துறையினர் (CRS) குவிக்கப்பட்டனர். வன்முறையாளர்களை தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்ய முற்பட்டனர். அதை அடுத்து காவல்துறையினர் மீது அவர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் காவல்துறை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Lyon நகரில் பேருந்து சேவைகளை இயக்கி வரும் TCL (Transports en commun lyonnais) நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்துகளே எரியூட்டப்பட்டுள்ளதாகவும், அதிகாலை 4.30 மணி வரை இந்த வன்முறை வெறியாட்டம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1